Friday 3rd of May 2024 11:48:51 PM GMT

LANGUAGE - TAMIL
பிரையன் டென்னஹி
ரம்போ திரைப்பட நடிகர் மரணம்!

ரம்போ திரைப்பட நடிகர் மரணம்!


ரம்போ திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவூட் நடிகர் பிரையன் டென்னஹி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

1982 ஆம் ஆண்டில் வெளிவந்த ரம்போ, பெர்ஸ்ட் பிளட் ஆகிய படங்களில் சில்வஸ்டர் ஸ்டோலனுடன் இணைந்து நடித்து பிரபலமாகியிருந்த பிரையன் டென்னஹி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

81 வயதான் பிரையனுக்கு சில வாரங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நியூ கேவன் நகரில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அவரது மகளும் நடிகையுமான எலிசபெத் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயது மூப்பால் எனது தந்தை உயிரிழந்துவிட்டார். அவர் நேர்மையானவர். அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. இயற்கையாக மரணமடைந்தார் என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பிரையனுக்கு ஹொலிவூட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE